சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குடும்பத் தகராறு காரணமாக, ஸ்ரீவித்யாவை, அவரது கணவர் விஜயமுருகன் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீவித்யா - விஜயமுருகன் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியை ஸ்ரீவித்யாவை, திடீரென பள்ளிக்குள் நுழைந்து விஜயமுருகன் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீவித்யா படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பள்ளி ஊழியர்களும் அக்கம் பக்கத்தினரும் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும், ஓமலூர் மாவட்ட டிஎஸ்பி சஞ்சீவ்குமார், கொலை நடந்த இடத்துக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் நுழைந்து மனைவியை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய விஜயமுருகனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
Summary
Tensions are high following the incident of a teacher being hacked to death in a school in Salem district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமயம் அருகே இளைஞா் கொலை

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக் கொலை! குழந்தையையும் கொன்று கணவா் தற்கொலை

பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



