சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை காலை திடீரென பயங்கர வெடி சப்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த நிலையில், ஒருவர் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டார். மேலும், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவரும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Summary
Sattur Firecracker Factory Accident! One Dead; Three Critically Injured!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

