புதுக்கோட்டை : தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில், ‘பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப். 11) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது :
“நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன் - ‘நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு’. மத்தியில் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சி அமைந்திருந்தால், நீட் தேர்வு தமிழகத்தில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை, பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தியே பேசியிருக்கிறார்; பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
ஆனால், கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியமைக்கிற பிரதமர் மோடியைப் பார்த்து, தமிழகத்துக்கு நீட் விலக்கு தாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் கேட்க முடியுமா?
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நாங்கள் சட்டப்பூர்வமாகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
கொள்கையை விற்றுப் பிழைக்கும் அவர்கள் கூட்டத்துக்கு, சுய மரியாதை உரிமைகளும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது” என்றார்.
Summary
M. K. Stalin names his brotherhood comrade Rahul Gandhi in Pudukkottai election rally
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொன்னேரியில் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாத ராகுல்! பெரியார் பற்றிப் புகழாரம்!

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன்?

சோனியா காந்தி விரைந்து நலம் பெற விழைகிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


