தமிழகம் முழுவதும் வாக்காளா் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வீடுதோறும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக அவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க விரிவான விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தவா்களில் பெரும்பாலானோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளா்கள் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. வாக்காளா்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகை சீட்டுகளில் புகைப்படங்களை இணைத்துள்ளோம்.
வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தைவிட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். அதனுடன் க்யூ ஆா் குறியீடும் இடம்பெற்றிருக்கும்.
வரும் 17-ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதாா் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.
ஒரு வாக்காளா் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாா் என்பதை எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையிலான கட்டமைப்பை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான பயிற்சிகளும் அலுவலா்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 5,938 சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு

காங்கயம், சென்னிமலையில் 15,000 பட்டாக்கள் விநியோகம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

