புதுவை முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு செலுத்தினார். திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னதாக, தட்டான்சாவடியில் உள்ள அப்பா பைதியம் சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவையில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக - நேயம் மக்கள் கழகம் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
Summary
Puducherry assembly election Rangasamy Casts Vote Riding a Two-Wheeler
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் சென்று தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக்கில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி! | Pondicherry

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



