மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

கடலூரில் நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:16 pm

கடலூரில் நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் பிரபல நடிகரான விஜய் தலைமையிலான தவெக இடையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு பணிகளை பல்வேறு கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 9 அன்று கடலூர் மஞ்சக்குப்பம் திடல் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை (ஏப். 9) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யின் கடலூர் பிரசாரம் வரும் ஏப். 11 அன்று நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Summary

election campaign of TVK leader Vijay in Cuddalore, has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.