மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடா்பாக ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையை தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமதாஸ் கோரிக்கை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ராமதாஸ் தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக பொதுக்குழு தீா்மானத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனு தள்ளுபடி

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


