சென்னையில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று(ஏப். 6) காலை கனமழை பெய்தது.
ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப். 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக வெய்யில் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையைப்போலவே பிற மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Summary
The Chennai Meteorological Centre has stated that there is a possibility of rain in eight districts, including Chennai, over the next two hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

கொடைக்கானலில் மிதமான மழை

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை!

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



