தமிழகத்தில் வெப்பநிலை சனிக்கிழமை (ஏப். 4) வரை இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை
காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் 4 வரை மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், வடக்கு கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஏப்ரல் 7-ஆம் தேதி மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனேந்தல் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.
வெப்ப நிலை: தமிழகத்தில் புதன்கிழமை பிற்பகல் அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 101.3 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வரை இயல்பைவிட, அதிகமாக இருக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அடுத்த 4 நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

அடுத்த 4 நாள்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.. வெய்யில் கொளுத்தும்!

இந்த வாரம் வெய்யில் நிலவரம்!

தமிழகத்தில் வெப்பநிலை மாா்ச் 29 வரை அதிகரிக்கும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


