மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிக்கமாட்டேன்: சுந்தர். சி

மத்திய தொகுதி வேட்பாளர் இயக்குநர் சுந்தர். சி பேட்டி...

News image

சுந்தர்.சி - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:03 am

தவெக தலைவர் விஜய் பற்றியும் அவரது கட்சி பற்றியும் விமர்சிக்கமாட்டேன் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் இயக்குநர் சுந்தர். சி கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிடுகிறார். அவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் களமிறங்குகிறார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய சுந்தர். சி,

"விஜய் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். என் மனைவியும் விஜய்யும் அக்கா - தம்பி போன்று பழகி வருகிறார்கள். அதனால் விஜய்யை எந்த வகையிலும் விமர்சிக்கவோ அவரது கட்சி பற்றி விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை போட்டி உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும்தான். மதுரை மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல மாதம் 15 நாள்கள் இனி மதுரையில்தான் இருப்பேன் என்று உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். தேர்தல் முடிவை வைத்துதான் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பேன்" என்று கூறினார்.

Summary

I will not criticize Vijay and his tvk party: Sundar C

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.