கன்னட மூத்த நடிகர் உமேஷ் காலமானார்
கன்னட மூத்த நடிகர் 'மைசூர்' ஸ்ரீகண்டய்யா உமேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கன்னட மூத்த நடிகர் 'மைசூர்' ஸ்ரீகண்டய்யா உமேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
By இணையதளச் செய்திப் பிரிவு
Sasikumar
கன்னட மூத்த நடிகர் 'மைசூர்' ஸ்ரீகண்டய்யா உமேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கடந்த 1945ஆண்டு மைசூரில் பிறந்த உமேஷ், நான்கு வயதில் 'லஞ்சாவதாரம்' புகழ் மாஸ்டர் கே ஹிரண்ணையாவின் நாடகக் குழுவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் குப்பி வீரண்ணாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு வெளியான 'மக்கல ராஜ்ஜியம்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இலங்கை வெள்ளம்: கிரிக்கெட் திடலில் மக்கள் தஞ்சம் அடைந்தார்களா? உண்மை என்ன?
நகர ஹோல், குரு சிஷ்யரு, அனுபமா என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணு வர்தன், அம்பரீஷ் என அனைத்து முன்னணி கன்னட நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழிலும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோருடனும் அவர் நடித்திருக்கிறார்.
மேலும் நடிப்பிற்காக கர்நாடக மாநில அரசின் திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருகளையும் வென்றுள்ளார். திரைப்படத் துறையில் அவரது வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் உமேஷ் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Veteran Kannada actor 'Mysore' Srikantayya Umesh died on Sunday after prolonged illness, family sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது