12 Dec, 2025 Friday, 09:15 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

PremiumPremium

டிட்வா புயல் மழையை எதிர்கொள்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Rocket

சென்னை

Published On30 Nov 2025 , 10:58 AM
Updated On30 Nov 2025 , 10:58 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Sasikumar

டிட்வா புயல் மழையை எதிர்கொள்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் டிட்வா புயல் மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 215 நிவாரண மையங்ளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 110 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று (30.11.2025) அடையாறு மண்டலம் வார்டு- 172, மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192, 198, 199, 200 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 32,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-14, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழைநீரினை மழைநீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பின்னர், வண்டல் மண் தொட்டியில் வண்டல் மண் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், இன்று 20 எண்ணிக்கையிலான மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை (SDRF) சார்ந்த 30 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100எச்சி மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

டிட்வா புயல் மழையின் காரணமாக சாய்ந்து விழும் மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. இன்று டிட்வா புயல் மழையின் காரணமாக விழுந்த 7 மரங்களின் கிளைகள் துரிதமாக அகற்றப்பட்டது.

இங்கிலாந்தில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

டிட்வா புயல் மழையின் முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிட்வா புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 இலட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு1இலட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Chennai Metropolitan Corporation has taken necessary precautionary measures to deal with the ditwah cyclone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023