விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?
விஜய் உடன் சந்திப்பு நிகழ்ந்திருக்கும் நிலையில் செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்குமா என்பது பற்றி...
விஜய் உடன் சந்திப்பு நிகழ்ந்திருக்கும் நிலையில் செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்குமா என்பது பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்துப் பேசியிருக்கும் நிலையில், அவர் தவெகவில் இணையும்பட்சத்தில் அமைப்புப் பொதுச் செயலர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யைச் சந்தித்து இன்று பேசியிருக்கும் நிலையில், செங்கோட்டையன், வியாழக்கிழமை காலை கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் சென்று, பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
பிறகு, அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இதனால், செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்புகள் எகிறின.
ஆனால், இன்று மாலையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் வீட்டுக்குச் சென்ற செங்கோட்டையன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
த.வெ.க. கட்சியில் இணைவது தொடர்பாக, விஜய் உடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, அவருக்கு, அமைப்பு பொதுச் செயலாளர் என்ற பதவி வழங்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் உறுப்பினராக இருந்து படிப்படியாக பல்வேறு பதவிகளைப் பெற்று, தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்த செங்கோட்டையன் அதிமுக ஆட்சிக் காலத்தில பல முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
ஒருசில மாதங்களாக, அதிமுக கட்சித் தலைமைக்கு எதிராக சில கருத்துகளைக் கூறி வந்ததாகக் கூறி, கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், இபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்பு குறித்து பேசியதால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
தற்போது தவெக தலைவருடன் சந்திப்பு, நாளை அக்கட்சியில் இணையும் வாய்ப்பு உள்ளது என தமிழக அரசியலில் பரபரப்பான காட்சிகள் நிகழந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது