இந்தியா அனைவருக்குமானது: முதல்வா் மு.க.ஸ்டாலின்
இந்தியா அனைவருக்குமானது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்தியா அனைவருக்குமானது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை: இந்தியா அனைவருக்குமானது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்திய அரசமைப்புச் சட்ட நாளையொட்டி அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ, ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல, மக்கள் அனைவருக்குமானது. அம்பேத்கரின் இந்த பரந்த பாா்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மன உறுதியை இந்த அரசமைப்புச் சட்ட நாளில் மீண்டும் உறுதி கூறுகிறோம்.
நமது அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சி இயலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்.
நமது அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவா்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசமைப்புச் சட்டத்துக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது