கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!
கோவைக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி குறித்து...
கோவைக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
கோவை கொடிசியாவில் நடைபெறவுள்ள இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு புதன்கிழமை வருகை தந்துள்ளார்.
ஆந்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, பிற்பகல் 1.25 மணியளவில் கோவை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கார் மூலம் கொடிசியா வளாகத்துக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவ.19) முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழக ஆளுநா் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருள்களை விநியோகிப்போர், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனா்.
இதையும் படிக்க: செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Regarding Prime Minister Narendra Modi's visit to Coimbatore...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது