டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழ்நாட்டில் 5 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல்...

News image
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்- ENS
Updated On :12 நவம்பர் 2025, 12:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கோவாவில் 99.99%, அந்தமான் நிக்கோபாரில் 89.22% பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும்

சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் 49.55%, புதுச்சேரியில் 93.04% படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 37 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிக்கை...

தேர்தல் ஆணைய அறிக்கை...

summary

78 percent SIR forms distributed in Tamil Nadu: Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.