உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1971-1972 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது, அதில் "நகர்ப்புரங்களின் வசதி வாய்ப்புகளைக் கிராமப்புரத்து மக்கள் ஒரு காலகட்டத்தில் பெற்றிட வேண்டும் என்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும்" என்று குறிப்பிட்டு கிராமப்புர வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கிராமப்புரங்களின் முன்னேற்றத்திற்காக சாலைகள், குடிநீர் திட்டங்கள், குடியிருப்புகள், பெரியார் நினைவு சமத்துவபுரம், முதலான பல்வேறு முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இந்தத் திட்டங்கள் இந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன.
அந்த வகையில், நிறைவேற்றப்படும் சில முக்கிய திட்டங்கள்:-
உள்ளாட்சிகளின் நிதி நிர்வாக அனுமதியை உயர்த்திய முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும்; வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.20 லட்சம் ஆகவும்; மாவட்ட ஊராட்சிகளுக்கான அனுமதி வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற ஊக்கமளித்துள்ளார்.
நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகள், 278 மலைப்புர ஊராட்சிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட சிறப்பு மானியம்
600 புதிய கிராமச் செயலகங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS)
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் – II (AGAMT-II)
ரூ.176 கோடியில் ஊரக நூலகங்களைப் புதுப்பித்தல்
ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு பாசன ஏரிகளைப் புதுப்பித்தல்
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT)
பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் (PMGSY)
கலைஞரின் கனவு இல்லம் (KKI)
ஊரக வீடுகள் சீரமைத்தல் (RRH)
முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் (MVMT)
ரூ.261 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பு
புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் வீடுகளைச் சீரமைத்தல்/மறுகட்டுமானம்
தனிநபர் இல்லக் கழிப்பறைகள் (IHHL)
வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டம் (JJM)
மத்திய அரசின் விருது
இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல் இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டினை உயர்த்தி நிலைநிறுத்திடும் உன்னத இலட்சியத்துடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாகத் தமிழ்நாட்டில் நிறைவேற்றி வரும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், நமக்கு நாமே திட்டம், சுகாதாரத் திட்டங்கள், குடிநீர் இணைப்புத் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டின் கிராமப்புரங்கள், நகர்ப்புரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. மத்திய அரசின் விருதுகளையும், பத்திரிகைகளின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Tamil Nadu government has announced that it has increased the financial management approval limits of local governments to help them function independently and implement projects within the stipulated time frame and make them available to the public.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


