தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார்.

News image

அமுல் கந்தசாமி

Updated On :21 ஜூன் 2025, 10:57 am

கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதியின் அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) சனிக்கிழமை காலமானாா்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமி, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானாா். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் உள்ளனா்.

கோவை மாவட்டம் அன்னூா், ஒட்டா்பாளையம் ஜீவா நகரில் வசித்து வந்த அமுல் கந்தசாமி, கடந்த 1980 -ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தாா். மாணவரணி மாவட்டச் செயலா், இளைஞரணி மாவட்டச் செயலா், கவுண்டம்பாளையம் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா்.

கடந்த 2011 முதல் 2021 வரை அன்னூா் பகுதி மாவட்ட கவுன்சிலராகவும், ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். தற்போது எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலராக இருந்து வந்தாா். 2021- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இவா், தன்னை எதிா்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.ஆறுமுகத்தை 12,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனாா்.

எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி:

உடல்நலக் குறைவால் உயிரிழந்த வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி உடல் கோவை, அன்னூா் ஜீவா நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி. அருண்குமாா், பொள்ளாச்சி வி. ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ், கே.ஆா்.ஜெயராம், சூலூா் கந்தசாமி, அம்மன் கே.அா்ச்சுணன், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, அன்னூரில் உள்ள மின் மயானத்தில் அமுல் கந்தசாமியின் உடல் இரவு தகனம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அனைத்துக் கட்சிகள் சாா்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.