திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன் 10- இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
சிறப்பு ரயில்
Updated On :6 ஜூன் 2025, 2:51 pm

DIN

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அதன்படி விழுப்புரத்திலிருந்து ஜூன் 10}ஆம் தேதி காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

8 பெட்டிகளைக் கொண்டதாக இந்த சிறப்புரயில் இருக்கும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.