இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முகூா்த்தம், வார விடுமுறை நாள்கள்: 1,220 சிறப்புப் பேருந்துகள்

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்.
Updated On :28 ஜனவரி 2025, 8:41 pm

Din

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 31) மற்றும் வார விடுமுறை நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (பிப். 1, 2) ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 365 பேருந்துகளும், சனிக்கிழமை 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 60 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 20 சிறப்புப் பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் என ஆக மொத்தம் 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.