2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்

இரண்டு நாள்களில் 7513 பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2025, 4:24 am

DIN

பொங்கல் திருநாளுக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், தொடர்ந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளையொட்டி, ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரிவோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் எந்தவித சிரமமின்றி பயணிக்கும்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1314 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1.8 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமையும் (ஜன. 11) வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 2,015 சிறப்புகள் என மொத்தம் 4107 பேருந்துகள் இயக்கப்பட்டன. 4,107 பேருந்துகளில் 2.2 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 7,513 சிறப்புப் பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும் பேருந்துகள் குறித்த விவரங்கள், புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.