குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்!

தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனையில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

News image
கோப்புப்படம்.- Din
Updated On :3 ஜனவரி 2025, 1:10 pm

DIN

தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனையில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அப்போது நிர்வாகிகள் நியமன தாமதம் குறித்து பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்திடம் விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் விஜய் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இதைத்தொடர்ந்து விஜய் தனது அரசியல் தொடர்பான நகர்வுகளை வேகப்படுத்தியுள்ளார். அண்மையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்த விஜய் மூன்று பக்க கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். விஜய் தற்போது நடித்து வரும் கடைசி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.