10 Dec, 2025 Wednesday, 12:16 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்ஸுக்கு அதிகாரம்! அதிமுக பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள்!

PremiumPremium

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பற்றி...

Rocket

அதிமுக பொதுக்குழு

Published On10 Dec 2025 , 12:07 PM
Updated On10 Dec 2025 , 12:09 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Ravivarma.s

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயக்குமார், பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானங்கள்

1. ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்துவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல்

2. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமிக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.

3. கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதகை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசுக்கு கண்டனம்.

4. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது, கனமழை, வெள்ளம், புயல் காற்றும் போன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க திமுக அரசு தோல்வி அடைந்து வருகிறது.

5. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை அதிமுக வரவேற்கிறது.

6. நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற திமுக அரசை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. அந்நிய முதலீடுகள் குறித்து தவறான புள்ளி விவரங்களை அளிக்கும் முதல்வருக்கு கண்டனம்

8. தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கிய முதல்வரின் நிர்வாகத் திறனற்ற போக்குக்கு கண்டனம்.

9. படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை. கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்.

10. சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது. தொடரும் கொலைகள் கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.

11. 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது. வற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கு எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களைய ஏமாற்றி வருகின்ற திமுகவுக்கு கண்டனம்.

12. விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் திமுகவினர் என்பது எவ்லோருக்கும் தெரிந்த ஒன்று. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜிநாமா என்கிற அளவுக்கு, ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

13. பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும், திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்.

14. தென்னக நதிகளின் இணைப்பை நிறைவேற்ற தவறிய திமுகவுக்கு கண்டனம்.

15. நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

16. எடப்பாடி கே. பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்.

முன்னதாக கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

EPS has the power to decide on alliance parties! 16 resolutions of the AIADMK general committee!

இதையும் படிக்க : 2026 தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு! கால அவகாசம் நீட்டிப்பு!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25
வீடியோக்கள்

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023