தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ராமதாஸை சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்: இறுதி முடிவு எட்டப்படுமா?

ராமதாஸை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்திக்கவிருப்பதால் இறுதி முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image

ராமதாஸ்

Updated On :18 மார்ச் 2024, 5:11 am

சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக - பாமக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாஸை, அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசவிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாள்களாக இழுபறியில் நீடிக்கும் நிலையில் இன்று இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பாமகவும் அதிமுகவும் தற்போது பாஜகவை புறக்கணித்துவிட்ட கைகோர்க்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில்தான் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அதிமுக நிர்வாகிகள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிமுக நிர்வாகிகள், ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

எனவே, அதிமுக- பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளநிலையில், பாமக, தேமுதிக என சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.