அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
பாஜக - அதிமுக கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வருகின்றது. பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் கூட்டணியில் இழுக்க இரு கட்சிகளும் தீவிர பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமினுடன் நேற்றிரவு பாமக எம்எல்ஏ அருள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை இன்று அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்திக்கின்றனர்.
அதேபோல், தேமுதிகவுடனும் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாளை மறுநாள் மார்ச் 20-ஆம் தேதி மூன்று கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளா் உறுதி

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?

என்.டி.ஏ.வுடன் தவெக கூட்டணி? மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



