தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக இரவில் நல்ல வெய்யிலும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகின்றது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்கள்..
இன்று முதல் ஜூலை 10 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 4 நாள்களுக்கு 2 -3 டிகிரி செல்சியஸ் வெய்யில் அதிகரிக்கும்!

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


