மக்கள் அச்சத்திலிருந்து விடுபட வேண்டும்: கோபாலகிருஷ்ண காந்தி
மக்கள் அச்சத்திலிருந்து விடுபட வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.


நாம் அனைவருமே ஏதோ ஒரு எனும் சிறையில்தான் அடைப்பட்டிருக்கிறோம். எனவே, மக்கள் அச்சத்திலிருந்து விடுபட வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
கல்விச் சிந்தனை அரங்கில், மகாத்மா காந்தியில் வழியில் என்ற தலைப்பில் பேசிய மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, மக்கள் அனைவரும் அச்சத்துக்கு இரங்கல் தெரிவித்துவிடுங்கள்.
சுதந்திரத்துக்குப் பிறகு காந்தி கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டிய கோபாலகிருஷ்ண காந்தி, அனைவரும் இங்கு சுதந்திரமாக நடமாடமுடியவில்லை. இந்தியர்கள் தங்களது சகோதரர்களைப் பார்த்தே பயப்படுகிறார்கள்? இதுதான் சுதந்திரமா? சுதந்திரத்தை மனிதர்கள் உணர்வதற்கு பதிலாக, அவர்களை அச்சம்தான் ஆட்கொண்டுள்ளது என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...