டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

News image
கோப்புப்படம்- DIN
Updated On :14 ஆகஸ்ட் 2024, 12:17 pm

DIN

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரது பைபர் படகில் மீனவர்கள் 4 பேர் நேற்று(ஆக. 13) வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் இன்று காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.