திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழ்நாடு மீனவர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்)
Updated On :9 ஆகஸ்ட் 2024, 11:39 am

DIN

தமிழ்நாடு மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், மாநிலத்தில் ஆட்சியையும் நாற்பது எம்பிக்களை வைத்துக்கொண்டு வழக்கம் போல கும்பகர்ண தூக்கத்தில் இல்லாமல், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.