ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 3:34 am

கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு நாள்தோறும் 10 அயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்த அலைகளால் தனுஷ்கோடி குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீா் புகுந்தது.

மேலும் அரிச்சல்முனை செல்லும் சாலை சேதமடைந்தது. இதையடுத்து, இங்கிருந்த க்யூ பிரிவு காவலா் நாராயணன் சக காவலருடன் சென்று அரிச்சல்முனையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்திருந்த வாகனங்களில் விரைந்து புறப்பட்டு அங்கிருந்து வெளியேறினாா்.

இந்த நிலையில் கடல் சீற்றம் இன்றும் அதிகரித்துள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக 20 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன. தடுப்புகளைத் தாண்டி நெடுஞ்சாலைக்கு கடல் நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.