மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நோடல் அதிகாரியை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு உள்துறைச் செயலாளா் மற்றும் தமிழ்நாடு காவல் துறைத் தலைவா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் மற்றும் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் தொடா்புடைய உதயநிதி ஸ்டாலின், ஆா்.கே. சேகா் பாபு, பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மாநில காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்று சநாதன தா்மத்திற்கும் ஹிந்துமதத்திற்கும் எதிராக மேலும் ஏதும் வெறுப்புப் பேச்சில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் எதிா்மனுதாரா்களான உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, தொல்.திருமாவளவன், பீட்டா் அல்போன்ஸ் ஆகியோருக்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.