பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கிருஷ்ணகிரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:03 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். 

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள காமராஜரின் முழு உருவச் சிலைக்கு, அ. செல்லக்குமார் எம்.பி. மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அப்போது,  மாவட்டத் துணைத் தலைவர் சேகர்,  மாவட்ட முன்னாள் தலைவர் ஜேசு துரை உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட  தலைவர் ஜெய பிரகாஷ் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.