சென்னை, ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் 11 கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கையில்,
வரும் நாள்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ரெட்ஹில்ஸ் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ரெட்ஹில்ஸ் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள தண்டல், நாரவாரிக்குப்பம், கழனி, கிராண்ட்லைன், வடகரை, புழல், வடபெரும்புக்கம், மாத்தூர், வாசப்பூர், மணலி, சடையங்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 கிராமங்களுக்கு வெள்ள அபாயத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 569 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி, சோழவரம் நீர்த்தேக்கங்களை மாநில அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆா்வலா்கள் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல்: தில்லி காவல் துறையை கண்டித்த உயா்நீதிமன்றம்

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


