கரோனா இரண்டாம் அலையின்போது அதிகம் பேசப்பட்ட, வாங்கப்பட்ட பொருள்களில் பல்ஸ் ஆக்ஸிமீட்டரும் ஒன்று. மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பலரது கேள்வியாக இருக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன? அதனை கரோனா பாதித்தவர்கள் நிச்சயமாக வாங்க வேண்டுமா? என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
அதாவது, கரோனா பாதித்து தீவிரமடையும்போது, சிலருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதுவும் கரோனாவின் ஒரு அறிகுறி. ஆனால், அந்த அறிகுறி எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவதில்லை.
ஆனால், எதிர்பாராதவகையில், சில கரோனா நோயாளிகளுக்கு திடீரென ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அப்போது, அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட வேறு பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனவேதான், கரோனா பாதித்தவர்கள், தங்களது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறிய பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கிக் கொள்கிறார்கள்.
இந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதிப்பதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு? ஒருவரது நுரையீரல் சீராகத் துடித்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை ரத்தத்துக்கு வழங்கி வருகிறது என்பதை வீட்டிலேயே நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
ஒரு வேளை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதுதான் பல்ஸ் ஆக்சிமீட்டரின் பயன்பாடு.
கரோனா பாதித்து எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கத் தேவையில்லை. ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டும் தேவையெனில் அல்லது மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் இதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


