டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மரணம்

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

News image

கோப்பிலிருந்து

Updated On :13 அக்டோபர் 2021, 5:49 am


ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண் யானை மரணமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் பகுதியில், பெண் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும், யானையை பரிசோதித்தனர். யானையை முழுமையாக சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், வயது காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யானை, பள்ளத்தில் விழுந்ததில், எழுந்து வர முடியாமல் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடலை அடக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.