ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கோவை பள்ளி மாணவர்

உலக யோகா சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த  பள்ளி மாணவரான நிரஞ்சன் அத்லெட்டிக் யோகா குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக யோகா சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச்  சேர்ந்த  பள்ளி மாணவரான நிரஞ்சன் அத்லெட்டிக் யோகா குறித்த விழிப்புணர்வை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என ஐ.நா சபை அறிவித்து, அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை கணபதி காந்தி மாநகரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற பள்ளி மாணவர் வீட்டிலிருந்தபடியே யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

தனது ஆறாம் வயது முதல் யோகா கற்று கொள்ள ஆரம்பித்த இவர், தாய்லாந்து, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற தங்க பதக்கங்கள் உள்பட பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அத்லெட்டிக் யோகா முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விளையாட்டு வீரர்கள் புதிய முறையில் இந்த யோகா பயிற்சியினை மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும், மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை இந்த யோகாவால் மேம்படுவதாகவும், உடல், மனம் உறுதியடைந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுவதால் விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சியோடு இந்த யோகாவையும் செய்வதால் அனைத்துவிதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.