தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருத்துறைப்பூண்டியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது  நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு திருத்துறைப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரெ.ஞானமோகன், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர். எம் வையாபுரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர், மாவட்டம் நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், ஒன்றிய செயலாளர் கே பாலு, நகர செயலாளர்  எம்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.