கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றால் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றால் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே முதல் முறையாக கரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொது முடக்கம் தொடங்கிய பிறகு இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இது வென்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த நபருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புடன் கரோனா தொற்றும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்றுக்கு உள்ளாகி ஒன்றரை மாதத்துக்குப் பிறகு, அவரது நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஜூலை மாதம் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நுரையீரலின் சிறு பகுதிதான் இயங்கி வந்தது.
ஜூலை 20 தேதியளவில் அவர் மூச்சுவிட முடியாமல் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தில்லி காஸியாபாத்தில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
இங்கு அவருக்கு எக்மோ கருவியின் உதவியோடு தொடர்ந்து சிகிச்சை அளித்தும், நுரையீரலின் நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு எக்மோ கருவி நீக்கப்பட்டு, உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...