மானாவாரியாக மரங்களை வெட்டிக் குவித்து, செல்போன் டவர்களை நட்ட நமக்கு மிகக் கடினமான வீட்டுப்பாடம் காத்திருக்கிறது.
பருவமழை நம்மை ஏமாற்றிச் சென்றதன் பலனாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
300 சதுர அடி கொண்ட தனது சிறிய வீடு முழுக்க டம்ளர், சொம்பு, குடம், குண்டான் என பல பாத்திரங்கள் முழுக்க தண்ணீரை நிரப்பி வைத்துள்ளார் சங்கீதா.
அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு குடிசைதான் இவர் வாழும் வீடு. ஆனால் தனது வீட்டில் நடமாடக் கூட போதிய இடம் வைக்காமல் வீடு முழுக்க தண்ணீரை நிரப்பி வைத்திருக்கும் சங்கீதா, மின்னுவதெல்லாமே தண்ணீர்தான். நகையை விட தண்ணீரைத்தான் பத்திரமாக பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார் 24 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்.
இதேப்போன்றுதான் 4வது தெருவில்இருக்கும் சத்யாவின் வீடும் இருந்தது. வீட்டு வாசலில் தொடங்கி வீடு முழுவதும் மஞ்சள் நிற தண்ணீர் நிறைந்த பாத்திரங்கள் அணிவகுத்து நம்மை வரவேற்றன.
எங்கள் வீட்டில் 4 பேர் பெரியவர்கள். ஒருவருக்கு 4 பக்கெட் தண்ணீர் தேவைப்படும். டேங்கர் லாரி வந்தால் குறைந்தது 15 - 20 பக்கெட் தண்ணீர் பிடித்தால்தான் அன்றைய தினத்தை ஓட்ட முடியும். சில சமயம் இன்னும் அதிகம் தண்ணீர்பிடித்தால் தான் அடுத்த நாள் லாரி வரும் வரை தண்ணீர் இருக்கும் என்கிறார் தண்ணீர் பக்கெட்டுகளை பார்த்தபடி.
இதில் சோகம் என்னவென்றால் சிறிய வீடுகளில் தண்ணீரைப் பிடித்துவைத்துவிட்டு நடக்கவோ படுக்கவோ இடமில்லாமல் சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள் என்பதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


