80-ஆவது பிறந்த தினம்: ராமதாஸுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
80-ஆவது பிறந்த நாள் காணும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


80-ஆவது பிறந்த நாள் காணும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 80-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முத்து விழா காணும் அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ராமதாஸுக்கு இணையதளத்திலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழினப்போராளி80 என்கிற ஹேஸ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக உழைக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு, பல்லாண்டு காலம் நீடுடி வாழ, இறைவனை வேண்டி என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...