கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நீட் தேர்வு போலி ஹால்டிக்கெட் விவகாரம்: ராசிபுரம் இ-சேவை மைய உரிமையாளர் தலைமறைவு

நீட் தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார்அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

Raghavendran

நீட் தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் மாணவி ஜீவிதாவுக்கு போலியான ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேவை மையமான டிஜிட்டல் சேவா மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

சேலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற தனது மகளுக்கு ஹால்டிக்கெட் குளறுபடியால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மகளின் எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலைியல், ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் இ-சேவை மையத்தின் உரிமையாளர் கலைச்செல்வி தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.