கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு சனிக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:58 pm

Raghavendran

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு சனிக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர விசாரணை மற்றும் சோதனைக்குப் பின்னர் முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் சென்னையில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.