எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பெரியார் சிலை தொடர்பாக எச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை

தமிழகத்தில் எக்காலத்திலும் அராஜக செயல்களை அதிமுக அனுமதிக்காது என்று முதல்வர், துணை முதல்வர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

Raghavendran

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போன்று வெகு விரைவில் தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி (பெரியார்) சிலைகள் அகற்றப்படும் என்பது போன்று பாஜக தேசியத் தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

பின்னர், அந்தப் பதிவை தனது அனுமதியின்றி உதவியாளர் பதிவிட்டுவிட்டதாகவும், எனவே அந்தக் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும், உதவியாளரை நீக்கி விட்டதாகவும் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெரியார் சிலை தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது. பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்குமே பலிக்காது.

இதுபோன்ற அராஜக செயல்களை அதிமுக அனுமதிக்கும் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம். தந்தை பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை. அவர் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை. தமிழகத்தில் ஜாதி, மதம், தீவிரவாதம், ரௌடிகள், தாதாக்களின் சாம்ராஜ்யங்கள் இல்லை.

தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பதுதான் மக்களின் கோபமாக உள்ளது. பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.