குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

திருவண்ணாமலையில் சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் சாவு

திருவண்ணாமலையில் கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடித்து மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. 

அப்போது அருகிலிருந்த பழமையான பில்லூரார் மடத்தின் கட்டிடச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி ரமேஷ், அலமேலு, லட்சுமணன் ஆகிய 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் இடிபாடுகளில் இருந்து 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதில், போதிய முன்னேற்பாடு இல்லாமல் இருந்ததே இவ்விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.