சென்னை: செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரே ரயிலில் செல்லலாம் என்று சொன்னால், சும்மா நக்கலடிக்காதீர்கள் என்று சொல்பவர்களுக்காக வந்துவிட்டது புதிய ரயில் சேவை.
வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து தெற்கு புறநகர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் புதிதாக 4 இணைப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வார நாட்களில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வழியாக, கும்மிடிப்பூண்டிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படும். வார இறுதி நாட்களில் இயக்கப்பட மாட்டாது.
காலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து ரயில் புறப்பட்டு, 9.50 மணிக்கு செங்கல்பட்டை அடையும். அதே ரயில் செங்கல்பட்டில் இருந்து 10.30க்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டியை 1.55க்கு வந்தடையும்.
அடுத்து, கும்மிடிப்பூண்டியில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 4.55 மணிக்கும், அடுத்த ரயில் 6.05க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கும்மிடிப்பூண்டியை இரவு 8.40 மணிக்கும் வந்தடையும்.
இந்த ரயில் சேவை வரும் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை, கும்மிடிப்பூண்டி மார்கத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தும்.
இதன் மூலம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ரயிலில் வந்து சென்னை சென்டிரலில் இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்தில் தாம்பரத்துக்கு ரயில் பிடிக்க ஓடும் பயணிகள் எண்ணிக்கையும் இனி நிச்சயம் குறையும்.
இது குறித்து பேசிய மூத்த ரயில்வே அதிகாரி, சென்னை சென்டிரலில் காலை வேளையில் ஏற்படும் மிகப்பெரிய கூட்ட நெரிசல் இதன் மூலம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் 151 ரயில்களில் 3.92 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 224 ரயில்சேவைகளில் சுமார் 5.55 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


