டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அடிக்கிற வெயிலுக்கும் ஆயிரம் காரணம் இருக்கு.. நமக்கென்ன தெரியும்? நிபுணர்கள் சொல்கிறார்கள்

கோடைக் காலத்தின் மிகக் கோரத் தாண்டவம் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டது. அதிக வெப்பமான முதல் நாளான நேற்று சென்னையில் 36.60 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:49 pm

ENS


சென்னை: கோடைக் காலத்தின் மிகக் கோரத் தாண்டவம் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டது. அதிக வெப்பமான முதல் நாளான நேற்று சென்னையில் 36.60 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்தது. 

தமிழகத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றின் திசை, மேற்கு திசையில் இருந்து மாறும் போது இப்படி வெப்பநிலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய துணை மேலாளர் ஒய்.இ.ஏ. ராஜ், எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசுகையில், இது காற்றின் திசை மாறும் காலம். ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் அது நிகழும். வறண்ட மேற்குப் பகுதியில் இருந்து காற்று வீசும். ஏப்ரல் 15ம் தேதி வரை நமக்கு பசுமையான கிழக்குப் பகுதிகளில் இருந்து காற்று வீசும். அதனால், வெப்பநிலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். தற்போது காற்றின் திசை மாறுகிறது. எனவே, கோடை வெப்பம் தகிக்கும். எனினும், ஒவ்வொரு நாளும் நிலவும் வெப்பத்தின் அளவானது காலையில் எந்த விதமான காற்று வீசுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்தார்.

கடற்கரை காற்றால் சென்னை மக்கள் ஓரளவுக்கு தப்பிக்கிறார்கள். கடும் வெப்பத்தை கடல் காற்று ஓரளவுக்கு மட்டுப்படுத்தும். ஆனால், வெள்ளிக்கிழமை போதிய கடல்காற்று இல்லாததே வெப்பத்துக்குக் காரணம். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையப் பக்கத்தில், நேற்று இரவு 9 மணிக்குக் கூட 31 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நீடித்தது. 82% அளவுக்கு புழுக்கம் காணப்பட்டது.

வானிலை பற்றி அறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் இது குறித்து கூறுகையில், மிக பலமான கடற்கரை மேகக் கூட்டங்கள், கடற்காற்றை தரைப் பகுதிக்கு வர விடாமல் தடுத்ததாகப் பதிவிட்டுள்ளார்.

அடுத்து வரும் நாட்களில், வெப்பநிலையானது இதே போல 35 டிகிரி செல்சியஸ் முதல் 36.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸை கடந்துவிட்டது. கரூர் பரமதியில் 41.2 டிகிரி, வேலூரில் 41.1 டிகிரி, திருத்தணியில் 41 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.