குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கார் பந்தய வீரர் குடிபோதையில் கார் ஓட்டினாரா? உறவினர் பதில்

சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாகப் பலியானார்கள்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:15 am

எழில்

இன்று காலை சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாகப் பலியானார்கள்.

இன்று காலை 3 மணிக்கு சென்னை சாந்தோம் சாலையில் அஸ்வின் ஓட்டி வந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார், வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து மரத்துக்கும் சுவருக்கும் இடையே மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடனே காரில் தீ பரவியதால், அஸ்வினும் அவரது மனைவி நிவேதிதாவும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். நிவேதிதா ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். இருவரின் உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அடையார் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.

கார் எரிந்துகொண்டிருந்தபோது சிலர் அதை செல்போன் வழியாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருடைய உறவினர் ஒருவர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஸ்வின் ஃபார்முலா ஒன் பந்தயங்கள் வரை கலந்துகொண்டுள்ளார். முதலில் கார், விபத்தில் சிக்கியுள்ளது என்றுதான் எனக்குத் தகவல் வந்தது. ஆனால் இங்குவந்த பிறகுதான் அஸ்வினும் அவர் மனைவியும் காரோடு எரிந்து உயிரை விட்டது தெரியவந்தது. அஸ்வின் குடிபோதையில் காரை ஓட்டினாரா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். அஸ்வினுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.