டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

'சிபிஐ வழக்கு'- கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தன் மீது பதியப்பட்ட சிபிஐ வழக்கு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளக்கிழமைதள்ளுபடி செய்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:29 pm

ANI

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சட்ட விரோதமாக ஒருதரப்பிடம் இருந்து மற்றொரு தரப்புக்கு பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரினை அடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனத்தின் அந்நிய முதலீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகக் கூறி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஜூலை 21-ந் தேதி ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு ஜுலை 19-ந் தேதி சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். ஆனால், கார்த்தி தள்ளுபடி செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.