திமுக கூட்டணியில் இருந்து 45 தொகுதிகளையாவது பெற முயற்சிக்கும் காங்கிரஸ்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, குறைந்தது 45 தொகுதிகளையாவது பெற முயற்சித்து வருவதாகத் தெரிகிறது


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, குறைந்தது 45 தொகுதிகளையாவது பெற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி - காங்கிரஸ் மேலிடக் குழுவினருக்கு இடையே நேற்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இழுபறியிலேயே முடிவடைந்தது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்டதாகவும், ஆனால் அதற்கு திமுக ஒத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 30 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன் வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, குறைந்தது 45 தொகுதிகளையாவது தர வேண்டும் என்று அக்கட்சி தனது முடிவை தளர்த்திக் கொண்டுள்ளது.
எனினும், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு 45 தொகுதிகள் அல்லது இதில் சற்றேறக் குறைய தொகுதிகள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...