கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஒன்றிணைந்த கேரள கட்சிகள்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுவதில் கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:25 pm

PTI

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுவதில் கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

அண்மையில் நிறைவடைந்த கேரள மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது இடதுசாரி முன்னணி. மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராகப் பதவியேற்றார்.

பதவியேற்குப் பின் தில்லி சென்ற விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேசித் சுமுகத் தீர்வு காண கேரள அரசு விரும்புகிறது. தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளது. அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்னையானாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம் என்றார்.

விஜயனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. விஜயனின் கருத்தால், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் என காங்கிரஸ் கட்சி கூறியது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவைக்கானப் பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் விஜயன், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய அணை கட்டுவதே இப்பிரச்னைக்குத் தீர்வு என்றார்.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனினும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அணை உறுதியாக இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தின் முன்பு நிரூபிப்போம் என்றார்.

தில்லியில் அளித்த பேட்டியிலிருந்து அப்படியே பின்வாங்கிவிட்டார் விஜயன்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் விஜயன் தனது நிலையை மாற்றிக் கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசின் நிலையையே தற்போதைய இடதுசாரி அரசும் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கேரளத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மாநில நலன் என்று வந்தால் அக்கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுப்பதில் தவறுவதில்லை. அதை தற்போதும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.